Saturday, April 16, 2011

விளங்காத விளக்கு



மூழ்கவில்லை !
எழவும் இல்லை!!

உற்சாகம் இல்லை!
சோர்வும் இல்லை !!

இன்பம் இல்லை !
கவலையும் இல்லை !!

கவனிக்கவில்லை!
கவனிக்காமல் இல்லை !!

பதறாமல் பயணித்த பாதையில்
இது என்ன புது விளக்கு ??

பச்சையும் இல்லை !!
சிகப்பும் இல்லை !!
மஞ்சளும் இல்லை !!

என் அவசர வாழ்க்கையில்,
குறுக்கிடும் இந்த விளக்கின்
பெயர் தான் என்ன ? ! ?