தொடவியலா தூரத்தில் நீ இருக்க
நினைவு பாதையில் தொலைந்தவளுக்கு
அமுதமாய் கிடைத்தது
முதலில் நீ அனுப்பிய மடல் ஒன்று J
நீ தந்த பரிசுகள்
ஒவ்வொன்றாய் அடுக்கி பார்க்கிறேன்
அழகற்று நிற்கிறது அனைத்தும்
தனியாய் தெரிகிறது என் நிழல்
எனக்கே அந்நியமாய்
மற்றபடி எல்லாம் இயல்பாய்
யாரும் இல்லா தனி இரவில் ,
மௌன வலியாய்
உணர்கிறேன்
என் மீதான என் கோபங்களை ! J
சரி என்றிருக்கலாம் .. விரைந்து வந்திருக்கலாம் …
சிந்தித்தேன் , சிதறினேன் , சிரித்தேன் J
No comments:
Post a Comment