"சில நேரங்களில் என்னையும்
மறந்து உறைந்து விடுகிறேன்
நீ பேசிய சில வார்த்தைகள் நினைவுகளில்
பேசாதவையோ நித்தம் என் கனவுகளில்
உன்னை கடக்கும் போதெல்லாம்
மனதில் சிறியதாய் ஒரு தூறல்
இன்றோடு உன்னை நினைப்பதில்லை
என்று தான் நினைத்து கொள்கிறேன்
இன்னும் நிறுத்தவில்லை உன்னை
நினைக்காமல் இருப்பேன் என்ற உறுதியை
தொடர்கதையாகி விடுமோ இந்த
சிறுகதை .. இறைவா..
முடியட்டும் இப்படியே !"
மனைவியின் கவிதையை படித்து கிழித்தெறிந்தான்,
பல வருடங்களுக்கு முன்னால்
அவனுக்காக எழுதியது தான் என்று தெரியாமல் !
No comments:
Post a Comment